Showing posts with label Thanjavur. Show all posts
Showing posts with label Thanjavur. Show all posts

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தஞ்சை அருகே நகர் ஊரமைப்புத்துறையில் முறையாக விண்ணப்பிக்காமலும், தொழில்நுட்ப அனுமதி பெறாமலும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பல முறை அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டும், கல்லூரி உரிமையாளர் முறையாக அனுமதி பெற விண்ணப்பம் அளிக்கவில்லை. இதையடுத்து தஞ்சை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் முரளி மற்றும் அதிகாரிகள் நேற்று முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரியின் முதல்அறை, அலுவலக அறை ஆகியவற்றிற்கு நகர் ஊரமைப்பு சட்டம் 1971(பிரிவு 56 மற்றும் 57)–ன் கீழ் மூடி சீல் வைத்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தஞ்சையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போக்குவரத்துப்பிரிவு போலீசார் சோதனை

பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்(ஏர்ஹாரன்) பொருத்தக்கூடாது என்று சட்டவிதி உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படாமல் பெரும்பாலான பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குறுகலான சாலைகளிலும் தனியார் பஸ்கள் அதிக ஒலியை எழுப்பி கொண்டு செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையோரம் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் இருந்து பயத்தில் கீழே விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதனால் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பானை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை நகர போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியிலும், தஞ்சை பழைய பஸ் நிலையம், தொம்மங்குடிசை ஆகிய பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழிமறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் இது போன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என்று பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது குறித்து போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் அந்த வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் கும்பகோணம் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகள்
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தாள் பிரகதீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலையும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையும், சிலைக்கடத்தல் மன்னன் கபூர் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. அவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அங்குள்ள சிலைகளை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அந்நாட்டு பிரதமர் டோனிஅபோட், அந்த சிலைகளையும் தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்திருந்தார். பின்னர் அந்த சிலைகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலைகள் மீட்பு
இந்நிலையில் அந்த சிலைகளை சென்னை கொண்டுவர தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அந்த சிலைகள் கடந்த 11–ந்தேதி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அந்த சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நேற்று அர்த்த நாரீஸ்வரர் சிலையை விருத்தாசலம் கோர்ட்டிலும், நடராஜர் சிலையை ஜெயங்கொண்டம் கோர்ட்டிலும் ஒப்படைத்தனர்.
பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு
பின்னர் 2 சிலைகளும் கோர்ட்டு உத்தரவின்படி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று இரவு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்நடராஜன் தலைமையில் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சிலைகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் மாரியப்பன் பெற்றுக்கொண்டார். உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையங்கள் தமிழ்நாட்டில் திருவாரூர் மற்றும் கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. ஜெயங்கொண்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பாதுகாப்பு மையமாக கும்பகோணம் உள்ளதால் இங்கு இச்சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி 21–ந்தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகா வழியே மேட்டூர் அணைக்கு 1934–ஆம் ஆண்டு முதல் 1974– ஆம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 363.5 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 2007– ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பில் இது 192 டி.எம்.சி.யாக குறைந்து விட்டது. 2013–ஆம் ஆண்டு நடுவர் மன்ற தீர்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால் இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது.
எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சை உள்பட காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை காவிரி மீட்பு குழுவினர் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 21–ந்தேதி நடக்கிறது.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு அனைத்து ஆதரவுகளையும் அளிப்பது எனவும், போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்களைதிரட்டுவது எனவும் கூட்டமைப்பின் தலைமை குழு முடிவெடுத் துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.