Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts

Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, 114 தரமதிப்பீட்டு புள்ளிகள் பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது.
ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, தென்னாப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
On Wednesday, September 03, 2014 by farook press in ,    
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிகெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் இன்று மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீ்ல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியைச் சேர்ந்த குக்- ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் முறையே 9, 6 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்தில் வீச்சில் வீழ்ந்தனர்.
3-வது வீரராக களம் இறங்கிய பேலன்ஸ் 7 ரன்னில் முகமது சமி பந்தில் வீச்சில் பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 23 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் அதிரடியாக ரன் குவிக்க இயலவில்லை. இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 28.2 ஓவரில் 103 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். ரூட் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த மொயீன் அலியைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 206 ரன்கள் எடுத்து சுருண்டது. மொயீன் அலி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டும், புவனேஸ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 569 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இங்கிலாந்து கேப்டன் குக் பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக, ஃபாலோ ஆன் முடிவைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாகத் தெரிவித்தது. 
 
இதையடுத்து  445 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டும் முனைப்பில் 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 5, ரஹானே 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 
கடைசி நாளில் 333 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத் தொடங்கிய இந்திய அணி, ரன் எதுவும் சேர்க்கும் முன்பே ரோகித்தின் விக்கெட்டைப் பறி கொடுத்தது. கேப்டன் தோனி 6 ரன்களிலும் கோஹ்லி 15 ரன்களிலும் ஆட்டமிழக்க, புவனேஷ்வர் குமாரும் முகமது ஷமியும் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆக, இந்திய அணி, மிகவும் தடுமாறியது. கடைசி விக்கெட்டாகக் களம் இறங்கிய பங்கஜ் சிங், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிவிட்டு, அதே ஓவரில் 9 ரன்களில் அவுட் ஆனார். ரஹானே மட்டும் நிலைத்து நின்று, கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல், 52 ரன்கள் சேர்த்தார்.
 
எனினும் இறுதியில் இந்தியா, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்தின் மொயீன் அலி, முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 6 விக்கெட்டுகளும் சாய்த்தார். எனினும் இரண்டு இன்னிங்சிலுமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
 
முதல் டெஸ்டை இரண்டு அணிகளும் டிரா செய்திருந்தன. முந்தைய இரண்டாவது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே, 3ஆவது டெஸ்டில் தோற்றாலும் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர், 1 - 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், ஆகஸ்டு 7ஆம் தேதி மன்ச் என்ற இடத்தில் தொடங்குகிறது. 
On Thursday, August 07, 2014 by Anonymous in
jacques kallis
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்ரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜேக்ஸ் காலிஸ் ஓய்வு பெற்றுள்ளார்.
 
தென் ஆப்ரிக்கா அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் காலிஸ். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் அணிக்கு வெற்றி தேடித்தருவதே தனது லட்சியமாக காலிஸ் கூறியிருந்தார். இதனால், ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் காலிஸ் மோசமாக விளையாடினார். 
 
3 போட்டியில் 0, 1, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீசவில்லை. இதன் காரணமாக, சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இத்துடன் எனது ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என அவர் சோகத்துடன் தனது முடிவு அறிவித்துள்ளார். தனது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 166 டெஸ்டில் விளையாடியுள்ள காலிஸ் 13,289 ரன்கள் எடுத்துள்ளார். 45 சதம், 58 அரைசதம். 328 ஒருநாள் போட்டியில் விளையாடி 11,579 ரன் எடுத்துள்ளார். 
On Thursday, August 07, 2014 by Anonymous in
முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே, 2014 ஆகஸ்ட் 01 அன்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 


































இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
On Thursday, August 07, 2014 by Anonymous in
 
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் முகமது யூனிஸ் கான் சதம் அடித்து அசத்தினார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் யூனிஸ் கான் சதம் அடித்தார். இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் சிறப்பாக விளையாடினார்.

மன்சூர் (3), செஷாத் (4) இருவரையும் சொற்ப ரன்னில் வெளியேற்றி பாகிஸ்தானை அவர் திணறடித்தார். அடுத்து வந்த அசார் அலி 30 ரன்களில் ஆட்டமிழந்த்ர்.

இந்நிலையில் 4 ஆவது விக்கெட்டுக்கு அனுபவ வீரர்களான யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 100 ரன் சேர்த்த நிலையில் மிஸ்பா உல் ஹக் (31) ஹெராத் சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய யூனிஸ் கான் டெஸ்ட் போட்டியில் தனது 24 சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்துள்ள இன்சமாம் உல் ஹக்கை (25 சதம்) அவர் நெருங்கி உள்ளார்.

அவருடன் இணைந்து ஆடிய ஆசாத் ஷபிக் நல்ல ஒத்துழைப்பு தர முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. யூனிஸ்கான் 133, ஷபிக் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
On Thursday, August 07, 2014 by Anonymous in

  • இந்தியாவின் கடைசி விக்கெட்டான பங்கஜ் சிங்கை வீழ்த்திய பிராட். | படம்: ஏ.பி.
    இந்தியாவின் கடைசி விக்கெட்டான பங்கஜ் சிங்கை வீழ்த்திய பிராட். | படம்: ஏ.பி.
  • ஒரே ஓவரில் விஜய், கோலியை வீழ்த்திய ஆண்டர்சன். | படம்: ஏ.பி.
    ஒரே ஓவரில் விஜய், கோலியை வீழ்த்திய ஆண்டர்சன். | படம்: ஏ.பி.
மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தியா 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற தோனி, ஆஸ்திரேலியா போல் ஈரப்பதத்துடன் கடினமாக இருந்த பிட்சில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அவரது முடிவை அவரது பேட்டிங்கும்,அஸ்வினின் அதிரடியுமே காப்பாற்றியது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 6 பேட்ஸ்மென்கள் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்து டெஸ்ட் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளது இந்தியா.

பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகி எழும்பத் தொடங்கியது முதல் ஓவரிலிருந்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கடைசி ஓவர் வரை நீடித்தது. காரணம் இந்தியா 46.4 ஓவர்களிலேயே ஆட்டமிழந்தது. பந்தின் சிவப்பு நிறம் மாறவேயில்லை. அதற்குள் இந்தியா ஆல் அவுட் ஆனது. 

8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்:

தவனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட கம்பீர் 2 லெக் திசைப் பந்துகளை தலா 2 ரன்கள் எடுத்து 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டூவர்ட் பிராட் வீசிய அருமையான எழும்பி வந்த பந்தை உள்ளே வருகிறது என்று நினைத்து லெக் திசையில் ஆடுமாறு மட்டையைத் திருப்பினார் ஆனால் பந்த் ஸ்விங் ஆகி வெளியே செல்லும் போது கம்பீர் மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் ஜோ ரூட் கையில் கேட்ச் ஆனது.

14 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காத முரளி விஜய் 3வது டெஸ்ட் வரை ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கர்களைக் கணித்து ஆடாமல் விட்டு வந்தார். ஆனால் இன்று ஆண்டர்சன் பந்து ஒன்று உள்ளே வந்து பிட்ச் ஆகி வெளியே செல்ல விஜய் கிரீசில் நின்றபடி அரைகுறை ஃபுட்வொர்க்கில் மட்டையை நீட்ட எட்ஜ் ஆகி குக் கையில் எளிதான கேட்ச் ஆனது.

அதே ஓவரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் விராட் கோலி ரன் எடுக்காத நிலையில் ஆண்டர்சன் வீசிய அவுட் ஸ்விங்கருக்கு ஆஃப்-காக் ஃபார்வர்டில் மட்டையைத் தொங்க விட பந்து விளிம்பில் பட்டு குக்கிடம் மீண்டும் கேட்ச் ஆனது. கோலி மிகுந்த வருத்தத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

புஜாரா 6 பந்துகள் விளையாடி ரன் எடுக்காத நிலையில் பிராட் வீசிய பந்தை தரையில் ஆட முடியாமல் போக அது நேராக ஜோர்டானிடம் கேட்ச் ஆனது. ஜோர்டான் அதனை அற்புதமாகப் பிடித்தார்.

தோனி-ரஹானே மீட்பு முயற்சி:

6வது ஓவரிலேயே தோனி களமிறங்கியது இதுவே முதல்முறையாக இருக்கலாம். அவரும் ரஹானேயும் இங்கிலாந்து பந்து வீச்சின் உச்சபட்ச தாக்குதலை எதிர்கொண்டு ஓரளவுக்கு திறமையுடன் ஆடினர்.

ரஹானே இரண்டு மிட் ஆஃப் டிரைவ்களை அபாரமாக ஆடினார். இருவரும் ஸ்கோரை மெதுவே 50-ஐ தாண்டி நகர்த்தினர். ரஹானே 52 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய ஸ்கோர் 61ஆக இருந்தது.

அப்போது ஜோர்டான் வீசிய பந்தை அவர் ஆடியிருக்கவே வேண்டாம். ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது ஏதோ இந்திய பிட்ச்களில் ஆடுவதுபோல் அரைகுறை ஃபுட்வொர்க்கில் வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்றார். இந்திய பிட்சாக இருந்திருந்தால் அது கவர் திசையில் பறந்திருக்கும். ஆனால் இங்கு பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பெல்லிடம் எளிதான கேட்ச் ஆனது. வலைப்பயிற்சியில் ஸ்லிப் கேட்சிங் பயிற்சி அளிப்பது போல் இருந்தது அவர் ஷாட். பெரும்பாலான இந்திய பேட்ஸ்மென்களின் ஷாட்களும் அத்தகைய கேட்சிங் பயிற்சிகளே என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தியா 62/5 என்று ஆனது.
இன்னிங்ஸின் 4வது டக்:

ஜடேஜா களமிறங்கினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மீதான தீர்ப்பு யாருக்கு அதிக வலியை ஏற்படுத்தியிருக்குமோ என்னவோ ஜடேஜாவுக்கு ஏற்படுத்தியிருக்கும் குறைந்தது அவரிடம் விக்கெட் கொடுக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் ஜடேஜாவை சொல்லி வைத்து லீக் பிளேயர் போல் எடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆம்! இரண்ட்டு பந்துகளை அவுட் ஸ்விங்கராக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசி விட்டு, ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார், பந்து முழு அளவில் விழுந்தது. ஜடேஜா அதனை பிளிக் செய்ய முயன்று நேராக காலில் வாங்க நடுவர் வானை நோக்கி ஆள்காட்டி விரலை உயர்த்தினார். இந்தியாவின் இந்த இன்னிங்ஸின் 4வது டக்கை எடுத்துச் சென்றார் ஜடேஜா பெவிலியனுக்கு. 

அஸ்வின் அதிரடி:

63/6 என்ற நிலையில் அஸ்வின் களமிறங்கினார். உண்மையில் இந்த அதிவேக பிட்சில் இதுவரை ஆடாமல் ஆடவந்த வீரர் போல் அவர் ஆடவில்லை. முறையான பேட்ஸ்மென் போல் ஆடினார். அதுவும் லூஸ் பந்துகளை அடித்து ஆடினார்.

3 பவுண்டரிகள் அடித்த அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஷாட் பிட்ச் பந்து ஒன்றை சிக்சருக்கும் தூக்கினார். பேக்ஃபுட் பஞ்ச் ஷாட்டையும் அவர் ஆடினார். ஒரு கேட்ச் அவருக்கு விடப்பட்டது என்றாலும் அவரது ஆட்ட முறை கவருவதாக அமைந்தது.

42 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 40 ரன்களை எடுத்தார். தோனியும், இவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 66 ரன்களைச் சேர்த்தனர்.

ஸ்கோர் 129 ரன்களை எட்டியபோது பிராட் வீசிய பவுன்சரை புல் ஷாட் ஆடி ராப்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அஸ்வின். இந்தியா 129/7 என்று ஆனது.

தோனியின் பொறுப்பான டெஸ்ட் இன்னிங்ஸ்:

இந்தியாவுக்கு வெளியே குறிப்பாக இங்கிலாந்தில் தோனியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இன்று கைகூடியது. 8/4 என்ற நிலையில் களமிறங்கிய தோனி ஓரிரு ஷாட்களை எட்ஜ் செய்தாலும் பெரும்பாலும் சரியாகவே ஆடினார்.

அவர் தனது 15 பவுண்டரிகளில் 10 பவுண்டரிகளையாவது அபாரமாக ஆடினார் என்று கூறலாம். சக்தி வாய்ந்த கட் ஷாட். கவர் மற்றும் மிட் ஆஃப் திசையில்டிரைவ் மற்றும் புல் ஷாட், பிளிக் என்று அவர் பவுண்டரிகளை அடித்தார். 

133 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த தோனி, பிராட் வீசிய பந்தை மிட் விக்கெட்டில் ஒரு டுவெண்டி 20 ஷாட் ஆட நினைத்தார். ஆனால் அங்கு ஜோர்டான் கேட்ச் பிடித்தார்.

புவனேஷ் குமார் உள்ளே வந்த பந்தை ஸ்டம்பை கவர் செய்யாமல் ஆடாமல் விட்டு ஸ்டம்ப்களை இழந்தார். பங்கஜ் சிங்கையும் பிராட் வீழ்த்தினார்.

ஸ்டூவர்ட் பிராட் 13.4 ஒவர்கள் வீசி 6 மைடன்களுடன் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

முதல் நாள் ஆட்டத்தில் இன்னமும் 41 ஓவர்கள் உள்ள நிலையில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளது.

On Thursday, August 07, 2014 by Anonymous in
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். | கோப்புப் படம்
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். | கோப்புப் படம்


இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆண்டர்சன் தொடர்ந்து வசையில் ஈடுபட வேண்டும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.

"4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் சிக்கி அவர் பலவீனமடைந்து விடக்கூடாது.

கடந்த ஆண்டு மைக்கேல் கிளார்க், ஆண்டர்சனை நோக்கிக் கூறிய வசை வார்த்தை அல்லது ஆண்டர்சன் தோனியை நோக்கி கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது நடுவர் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டும்.

இது போன்ற கெட்ட வார்த்தைகள் விவகாரத்தில் தன் பெயர் இழுக்கப்படுவதை ஜேம்ஸ் ஆண்டர்சன் விரும்ப மாட்டார். அவருக்கு இளம் வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய வார்த்தைகளை தம் தந்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவது நல்லதல்ல.

ஷிகர் தவன், தோனி ஆகியோர் ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் திக்கித் திணறிவருகின்றனர். அதை நினைவுபடுத்தினாலே போதும், தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதில்லை.

ஆண்டர்சனை விளையாடும் போது தோனி அங்கும் இங்குமாக அலைந்து திக்கி திணறுகிறார். அதனை நினைவுபடுத்தினாலே போதுமானது. அந்த வகையில் ஆண்டர்சன் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்யலாம்” என்கிறார் மைக்கேல் வான்.
On Thursday, August 07, 2014 by Anonymous in
மான்செஸ்டரில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக கம்பீரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினும், மொகமது ஷமிக்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பங்கஜ் சிங்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு வெளியே அஸ்வின் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 75 ரன்கள். இந்த மோசமான நிலையை அஸ்வின் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.

இந்திய அணி: கம்பீர், முரளி விஜய், புஜாரா, கோலி, ரஹானே, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்

இங்கிலாந்து அணி: குக், ராப்சன், கேரி பேலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, பட்லர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான்
On Thursday, August 07, 2014 by Anonymous in
  • தோனி
    தோனி
  • ஜேம்ஸ் ஆண்டர்சன், குக், ஸ்டீவன் பின் | படம்: ராய்ட்டர்ஸ்
    ஜேம்ஸ் ஆண்டர்சன், குக், ஸ்டீவன் பின் | படம்: ராய்ட்டர்ஸ்
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
கடந்த போட்டியில் 266 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட இந்திய அணி, அதிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்திலும், 10 போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கும் இங்கிலாந்து, வெற்றியைத் தொடரும் முனைப்பிலும் களம் காணுகின்றன.
இந்திய அணி கடந்த போட்டியில் 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியபோதும் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 330 மற்றும் 178 ரன்களுக்கு சுருண்டது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் பந்துவீச்சு எடுபடாமல் போனது.
அஸ்வினுக்கு வாய்ப்பு
4-வது போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில்கூட ஆடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. அவர் களமிறங்கும்பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா அல்லது ரோஹித் சர்மா நீக்கப்படலாம். கடந்த ஆட்டத்தில் மோசமான ஷாட்களை கையாண்ட ரோஹித் சர்மா நீக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
இதேபோல் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் தடுமாறி வரும் ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கௌதம் கம்பீர் சேர்க்கப்படலாம். ஒரு வேளை ரோஹித் சர்மா நீக்கப்படாத பட்சத்தில் ஷிகர் தவனை மட்டும் நீக்கிவிட்டு, அவருக்குப் பதில் அஸ்வின் சேர்க்கப்படலாம். அதேநேரத்தில் கம்பீருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படியொரு சூழல் ஏற்படும்பட்சத்தில் முரளி விஜயும் புஜாராவும் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கலாம்.
தடுமாறும் கோலி, புஜாரா
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முரளி விஜய், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் மட்டுமே நம்பிக்கையளிக்கின்றனர். கேப்டன் தோனி ஓரளவு ஆடி வருகிறார். மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது கவலையளிப்பதாக உள்ளது. முரளி விஜய், ரஹானே, கோலி, புஜாரா ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும்.
கவலையளிக்கும் பந்துவீச்சு
கடந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு மெச்சும்படியில்லை. புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட அனைத்து பௌலர்களுமே துல்லியமாக பந்துவீசவில்லை. ஆனால் இவர்களைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளது இந்தியா. கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் புவனேஸ்வர் குமார் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவர் களமிறங்குவது குறித்து டாஸ் போடும் நேரத்திலேயே முடிவு செய்யப்படும்.
கடந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்கிற்கு ஒரு விக்கெட்கூட கிடைக்காமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதனால் இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாக வருண் ஆரோன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி களமிறங்குகிறார்.
கடந்த போட்டியில் இந்தியா படுதோல்வி கண்டதற்கு பீல்டிங்கும் ஒரு காரணம். ஸ்லிப் திசையில் கிடைத்த கேட்சுகளையெல்லாம் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டதால் வாழ்வு பெற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வலுவான ஸ்கோரை குவித்தனர். எனவே இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு சவால் அளிக்க இந்தியாவின் பீல்டிங்கில் துல்லியமாக அமைவது அவசியம்.
பார்மில் இங்கிலாந்து
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் குக், இயான் பெல் ஆகியோர் மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணியின் மிகப்பெரிய பலமாகும். மிடில் ஆர்டரில் கேரி பேலன்ஸ் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இதுதவிர விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பின்வரிசை பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வருகிறார். ஜடேஜாவை தள்ளிவிட்டதாக எழுந்த சர்ச்சையிலிருந்து எவ்வித தண்டனையுமின்றி தப்பித்தஆண்டர்சன், இந்திய பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.
சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியை நம்பியிருக்கிறது இங்கிலாந்து. கடந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியாவின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மொயீன் அலி, இந்தப் போட்டியிலும் அதே உத்வேகத்தில் பந்துவீசுவார் என நம்பலாம்.
இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், முரளி விஜய், கௌதம் கம்பீர், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஈஸ்வர் பாண்டே, பங்கஜ்சிங், வருண் ஆரோன், நமன் ஓஜா.
இங்கிலாந்து: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் ராப்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் ஃபின்.

On Thursday, August 07, 2014 by Anonymous in
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் ‘டின்’ (ஸ்குவாஷ் பலகை) உயரத்தைக் குறைத்தது, தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத் தக்கூடிய தீபிகா பலிக்கல்-ஜோஷ்னா சின்னப்பா ஜோடிக்கு சாதகமாக அமைந்தது. சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் தீபிகா பலிக்கல்-ஜோஷ்னா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. 1998-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்ட பிறகு அதில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்கள் என்ற பெருமையோடு சென்னை திரும்பியிருக்கிறது தீபிகா-ஜோஷ்னா ஜோடி. தங்கப் பதக்கத்தோடு சென்னை திரும்பிய அவர்கள் “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் ‘டின்’ உயரத்தை 17 அங்குலத்திலிருந்து 13 அங்குலமாக குறைத்தது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே 13 அங்குல உயரத்தில் பயிற்சி எடுத்திருந்தோம். ‘டின்’ உயரம் குறைவாக இருந்ததால் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது எளிதாக இருந்தது. ஆனால் எதிர் வீராங்கனைகளின் ஷாட்டை சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது என்றனர். நாட்டுக்காக பதக்கம் வெல்வது எப்போதுமே மிகப்பெரிய கௌரவம் என தெரிவித்த ஜோஷ்னா, “ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் இல்லை. அதனால் எங்களைப் போன்ற ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கையில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வதுதான் மிகப்பெரிய சாதனை. நம்முடைய நாட்டில் காமன்வெல்த் போட்டி மிகப்பெரிய போட்டியாகும். அதில் தங்கப் பதக்கம் என்பது மிகச்சிறப்பான ஒன்று” என்றார். சர்வதேச தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் ஜோஷ்னா, தீபிகாவுடன் ஜோடி சேர்ந்து ஆடியது குறித்தும், அதன்பலம் குறித்தும் பேசுகையில், “தீபிகா எப்போதுமே சிறப்பாக ஆடி புள்ளிகளைப் பெற்றுத்தருவதில் திறமைசாலி. அதற்காக நான் புள்ளிகளைப் பெற்றுத்தரவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர் என்னைவிட அதிக அளவில் புள்ளிகளைப் பெற்றுத்தந் தார். எங்களுக்கு எதிராக ஆடியவர் களால் எங்களின் பலவீனத்தைக் கண்டறிய முடியவில்லை. நாங்களும் பலவீனமாக இல்லை. அதனால் எங்கள் இருவரில் யார் மீது தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது என எதிரணி வீராங்கனைகளுக்கு தெரியவில்லை” என்றார். சர்வதேச தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் தீபிகா பலிக்கல் கூறுகையில், “நாங்கள் இருவரும் ஆரோக்கியமான நட்புறவுடன் இருக்கிறோம். காமன்வெல்த் போட்டிக்கு முந்தைய பயிற்சி எங்களுக்கு நன்றாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறோம்” என்றார்.

Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 28 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 17 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இத்னைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சில் ரகானே சிறப்பாக ஆடிய 103 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜிஎஸ் பல்லன்ஸ் 110 ரன்களும், பிளன்கட் 55 ரன்களும் குவித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 342 ரன்களுக் ஆட்டம் இழந்தது. முரளி விஜய் 95 ரன்களும், ரவீந்தர் ஜடேஜா68 ரன்களும், புவனேஸ்வர் குமார் 52 ரன்களும், குவித்தனர். இதனையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றிய என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் கூக் 22 ரன்களுடனும், ரோம்சன் 7 ரன்களுடனும், பல்லான்ஸ் 27 ரன்களுடனும், பெல் ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று களம் இறங்கியது. 5 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரூட், எம்எம் அலி ஜோடி100 ரன்கள் குவித்தது. இந்நிலையில் ரூட் 66 ரன்களுடனும், அலி 39 ரன்களுடனும் அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இங்கிலாந்து அணி 88.3 ஓவரில் 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். முன்னதாக முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழத்திய புவனேஸ்குமார், 36 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் எடுத்து சிறப்பாக ஆடினார். 28 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியை லார்ட்ஸ் மைதானத்தில் வென்றுள்ள இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
On Tuesday, July 22, 2014 by Anonymous in    
"கிரிக்கெட்டைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுகிறது. வெளி நாடுகளிலும் சவால்களை எதிர் கொண்டால் இந்திய அணியால் சாதிக்க முடியும்' என ஆஸ்திரேலியா முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் ஜேமி வேயர் தெரிவித்தார். ஐந்து முறை உலகின் சிறந்த ஹாக்கி வீரர் விருதை வென்ற ஜேமி வேயர் கூறியது: கிரிக்கெட் அணியைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக ஆடுகிறது. ஆனால், வெளிநாடுகள் என்று வரும்போது தடுமாறுகின்றனர். வெளிநாட்டில் வானிலை, ஆடுகளம், உணவு என எல்லாமே மாறுபட்டு இருக்கும். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு முழு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால், நிச்சயம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறவது உறுதி. அதற்கு மேல் நடப்பதை இப்போது கணிக்க முடியாது. கடந்த காமன்வெல்த் போட்டி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியா அதிக கோல்கள் (8-0) அடித்தது. கடந்தமுறையுடன் ஒப்பிடும்போது தற்போதைய இந்திய அணியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பையில் நாங்கள், இறுதிச் சுற்றில் 6-1 என நெதர்லாந்தை வீழ்த்தினோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில்தான் வெற்றிபெற முடிந்தது. இந்திய அணி சிறந்த அணிதான். ஆனால், உலகின் சிறந்த அணி என்பதை நிரூபிக்க இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்
On Tuesday, July 22, 2014 by Anonymous in    
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். செüரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஸ்குவாஷ் அணி கிளாஸ்கோ புறப்பட்டு சென்றது. அவர்களுடன் மலேசியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் சுப்ரமணியன் சிங்காரவேலு, மகளிர் அணி பயிற்சியாளர் புவனேஸ்வரி குமாரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக உள்ள சைரஸ் அணியினருடன் செல்லவில்லை. இது குறித்து துரோணாச்சாரியா விருது வென்ற அவர் கூறுகையில் "என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. தாமதமாக ஸ்காட்லாந்து செல்வேனா என்பதும் தெரியாது. மொத்தத்தில் அணியினருடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது' என்றார். "பயிற்சியாளர் சைரஸ் எங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருந்தது. நாங்கள் அவரை "மிஸ்' செய்கிறோம்' என வீரர்கள் தெரிவித்தனர். இதற்கு இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளர் ஸ்ரீவத்ஸன் பதிலளிக்கையில் "ஸ்குவாஷ் கூட்டமைப்பின் செலவில் சைரஸ் விரைவில் கிளாஸ்கோ செல்வார், அரசு செலவில் அல்ல' என்றார்.