எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!


எம் வீர காவியம்
நின்னு கேளுடா
ஈழமுன்னா வெறும்
மண்ணு இல்லைடா..
புலி கொடி பறந்து
ஆண்ட தேசம்டா
உலகை
இன்றும் தாங்கும்
ஒற்றை இனமடா!
பெண்ணைத் தாயென
பார்த்த பூமிடா
வந்தவரெல்லாம்
வாழ்ந்த மண்ணுடா
பொண்ணும் பொருளும்
நிறைந்த சொர்க்கம்டா
போட்டதை எல்லாம்
விளைத்த வர்க்கம்டா..!
காலம் ஏனோ மாறி
போச்சிடா
கயவர்களாலே ஆடி
போச்சிடா
குழந்தையும் குடும்பமும்
மாண்ட சோகம்டா
கொலைவெறி தரித்து
நடந்த துரோகம்டா!
அறுபது வருடம்
எரியும் நெருப்புடா
அநீதி அழிந்திட
பூண்ட போருடா
இரண்டில் ஒன்றே
பார்க்கும் வீரம்டா
எதிர்க்கும் காலம்
தூரமில்லடா!
குண்டுகளெல்லாம்
உமிழும் எச்சில்டா
உயிரே கூட
துச்சமில்லடா
ஈழம் ஒன்றே
கனவு கனவுடா..
விடுதலை ஒன்றே
எல்லை கோடுடா!
காலம் என்ன -
களையா பறிக்கு(ன்)டா?
காலம் என்ன - எமை
களையா பறிக்கு(ன்)டா -
ஈழம் வெல்ல -
எதிர்த்தா நிற்கும்டா?
ஓரங் கட்டி
நின்ற கணக்கெலாம்
வீரம் பூட்டி
வெல்வதுறுதிடா
யாம் சேர்ந்தால் ஞாலம்
சுருண்டு போகும்டா -
தமிழன் மூச்சின் வெப்பம்
ஈழம் வெல்லும்டா!
யாமும் ஓர்தினம்
ஆளுவோமடா -
தமிழன் - ஆண்ட பெருமையை
பாடுவோமடா
உரக்கக் கத்தி
கூறுவோமடா
ஈழ விடுதலை வெல்லவே
சுவாசிப்போமடா!
வெற்றி என்பது
வெறும் - பேச்சி இல்லடா
புலிக்கொடி பறக்கும்
சாட்சி நாளடா
இதை நெஞ்சிலேற்றி
நித்தம் வாழடா
விடுதலை வெல்ல
உறுதி கொள்ளடா!! உறுதி கொள்ளடா!!!


ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்


காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,
நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு
கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.
தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.
இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.
ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?
மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?


ஈழம் கவிதைகள் – சிறைப்பட்ட சுவாசங்கள்

கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!
டல்கள் இல்லை என்ற போதும்
இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது
தமிழனின் சுவாசங்கள் அந்த
முள்வேலி முகாம்களில்
தோட்டாக்களின் சத்தங்களும்,
தமிழனின் கதறல்களும் மட்டுமே
இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது
நிசப்த இரவுகளிலெல்லாம்
தனிமை என்ற பெயரில் .!
ரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம்
சிறகுகளில் சிலுவைகள் சுமக்கிறது
உள்ளம் .!
தூரத்துப் பெண்ணொருத்தியின்
கதறல் சத்தம் .
அழுது அழுது வறண்டு போன
கண்களிலும் மீண்டும்
ஊற்றெடுக்கும் கண்ணீர் !
றந்த உடலென்று உணராத
குழந்தையொன்று  அங்கு
அழுகை நிறுத்தி கொங்கைகளை
 சவைந்துகொண்டிருக்கிறது .
காக்கைக்கும் , கழுகுக்கும்
பங்காளி சண்டை
இறந்த தமிழனை யார் முதலில்
ருசிப்பது என்று .
ஞ்சியதை இழுத்து செல்ல
எதிர்பார்புகளை எல்லைகளில்
நிறுத்தி காத்திருக்கும்
ஓநாய் ஒன்று .
வர்களின் உயிர்களை எல்லாம்
குடித்து முடித்த மகிழ்ச்சி களைப்பில்
ஓய்வெடுக்கும் எதிரியின் துப்பாக்கிகள் . என
ஒவ்வொன்றாய் பார்த்து ரசித்த இரவொன்று
இறந்துபோனது பகலை பிரசவித்த
சில நொடிகளில் !!!!….
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.